உலக செய்திகள்

லடாக் எல்லை அருகே உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அதிபர் சுற்றுப்பயணம்

ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை வந்தார்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என கூறி வரும் சீனா, எல்லைகளில் அவ்வப்போது வாலாட்டி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கு வந்த ஜி ஜின்பிங், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை சந்தித்துப் பேசினார்.

ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை வந்தார். ஜின்ஜியாங் ராணுவ பிரிவுதான் லடாக் எல்லை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்பிரிவின் ராணுவ உயர் அதிகாரிகள் வீரர்கள் ஆகியோரை சந்தித்த ஜிங்பிங் அவர்களிடம் எல்லையை சிறப்பாக பாதுகாப்பதாக பாராட்டினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை