உலக செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்த சீன சிறப்பு தூதர் வடகொரியா விரைகிறார்

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

பீஜிங்,

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. தொடர் பொருளாதார தடைகளையும், உலக எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல், தனது அணுசக்தி திட்டங்களில் உறுதியாக இருக்கிற வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்து பேசினார்.

வடகொரியாவின் நட்பு நாடு சீனா என்பதால் இந்த விவகாரத்தில் சீனா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சிறப்பு தூதர் ஒருவரை வடகொரியாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்புகிறது.

அவர், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச தொடர்பு துறையின் தலைவர் சாங் டாவ் ஆவார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு