Image courtesy: ANI 
உலக செய்திகள்

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானம்..! எச்சரிக்கை விடுத்த தைவான் ராணுவம்..!!

தைவான் நாட்டின் வான்வெளியில் சீன இராணுவ விமானப்படையின் ஸ்பாட்டர் விமானம் அத்துமீறி நுழைந்துள்ளது.

தினத்தந்தி

தைப்பே,

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் ஸ்பாட்டர் விமானம் தங்கள் நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

இது குறித்து தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் Y-8 எலியின்ட் (ELINT) ஸ்பாட்டர் விமானம் தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று (மார்ச் 16) காணப்பட்டது . சீன விமானத்தை உடனடியாகத் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

இந்த புலனாய்வு விமானத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தினோம். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தைவானின் எல்லைக்குள் ஜனவரி 23 அன்று 39 சீன விமானங்கள் ஊடுருவி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்