உலக செய்திகள்

காலையில் கல்லூரி, மாலையில் போராட்டம்... இலங்கையில் கவனத்தைக் கவரும் மாணவர்கள் போராட்டம்

காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

தினத்தந்தி

கொழும்பு,

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மாணவர்கள் மிகத் தீவிரமாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றியடைய வைத்தனர்.

இதைப் போலவே இலங்கையில் தற்போது அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தியும், ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பூங்காக்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கூடி கையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு கல்வி அறிவு வழங்க வேண்டும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அந்த பதாகைகளில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இந்த அமைதி போராட்டத்திற்கு இலங்கை மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்