உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் மோதல்; மாகாண துணை கவர்னர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் கபீசா மாகாண துணை கவர்னர் தலீபான்களுடனான மோதலில் இன்று கொல்லப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான இந்த போரில், அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது.

தலீபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் நடத்தப்பட்ட தலீபான்களின் தாக்குதலில், புலிட்சர் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், கபீசா மாகாணத்தில் நிஜ்ரப் மாவட்டத்தில் இன்று நடந்த தலீபான்களுடனான மோதலில் துணை கவர்னர் அஜீஸ் உர் ரகுமான் தவாப் கொல்லப்பட்டு உள்ளார். இதனை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு