உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 3 பேர் உயிரிழப்பு, 27 பேர் படுகாயம்

சீனாவின் வடகிழக்கு, தென்மத்தியப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் யாங்பி யீ என்ற சுயாட்சி பகுதியில் நேற்று (வெள்ளி கிழமை) தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேற்றிரவு 9 மணியில் இருந்து 11 மணிக்குள் யாங்பி பகுதியில் ரிக்டரில் 5.0 அளவிலான 4 நிலநடுக்கங்கள் பதிவாகின.

இதையடுத்து சீனாவின் டாலிக் பகுதியில், நேற்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தென்மத்தியப் பகுதியில் உள்ள குங்கைய் மாகாணத்தில், ரிக்டர் 7.3 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிவிப்பை சீனா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்