உலக செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு; நேபாள எம்.பி., தாயார் படுகாயம்

நேபாள காங்கிரஸ் எம்.பி. மற்றும் அவரது தாயார் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாள நாட்டில் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் டாக்டர் சந்திரா பண்டாரி. புத்தாநகரில் உள்ள இவரது இல்லத்தில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து உள்ளது.

இந்த வெடிவிபத்தில் பண்டாரிக்கு 25 சதவீதம் காயம் ஏற்பட்டு உள்ளது. அவரது தாயாருக்கு 80 சதவீதத்திற்கும் கூடுதலான தீக்காயம் ஏற்பட்டு உள்ளது என பண்டாரியின் செயலாளர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கீர்த்திப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். இதுபற்றி கீர்த்திப்பூர் தீக்காய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, நிலைமை நன்றாக இல்லை.

சிகிச்சை அளிக்கும் சாத்தியம் இல்லாத நிலை உள்ளது. அதனால், நேபாளத்திற்கு வெளியே வேறு நாட்டில் தீக்காயத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு