உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,386 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 1,386 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிரேசிலியா,

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இதனை தொடர்ந்து 3வது இடத்தில் பிரேசில் உள்ளது.

உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கையில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 1,386 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 2,54,221 ஆக உயர்ந்து உள்ளது.

பிரேசிலில் 61,602 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 1 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரத்து 232 ஆக உயர்ந்து உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட சாவோ பவுலோ நகரத்தில் 20.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் 59,428 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனை தொடர்ந்து ரியோ டி ஜெனீரோ நகரில் 5.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் 33,035 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்