உலக செய்திகள்

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,253 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,86,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோம்,

இத்தாலியில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கும் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,86,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 837 லட்சத்து 41 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 360 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58,17,138 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 23,84,212 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்