பிரேசிலியா,
தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,51,84,790 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 934 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,37,14,135 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 10,48,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.