இதுகுறித்து சார்ஜா போலீசார் கூறியதாவது:-
ஆளில்லா குட்டி விமானம்
சார்ஜா பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆளில்லா குட்டி விமான மூலம் பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. சார்ஜா அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டியின் வழிகாட்டுதலுடன், உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் விமான சேவைப்பிரிவின் உதவியுடன் இந்த ஆளில்லாத விமானம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சார்ஜா பகுதியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரபி, ஆங்கிலம், உருது, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நகரின் 35 இடங்களில் நடந்து வருகிறது.
விழிப்புணர்வு பிரசாரம்
இதற்காக இந்த ஆளில்லாத விமானத்தில் ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு குரல் பதிவு மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.குறிப்பாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டியது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றி தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வழிமுறைகள் உள்ளிட்டவையும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் முதல் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு
பிரசாரம் தொழிலாளர் முகாம்கள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.