வாஷிங்டன்,
உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா பாதிப்புக்கு அமெரிக்கா அதிகளவில் இழப்புகளை சந்தித்து உள்ளது. அந்நாட்டில் 80 சதவீதம் அளவுக்கு இறைச்சி தேவையை பூர்த்தி செய்ய கூடிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில், முன்பு மதிப்பிடப்பட்ட விவரங்களை விட 3 மடங்கு கூடுதலாக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இதன்படி, 59 ஆயிரம் பேருக்கு பாதிப்புகளும், 269 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.