கம்பாலா,
உகாண்டா நாட்டில் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதம் பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த உயர்வை முன்னிட்டு அந்நாட்டு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதன்படி, புதுவருட கொண்டாட்டத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டு போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்போது, கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்டள்ள நிச்சயமற்ற நிலையால், 2வது ஆண்டாக புதுவருட கொண்டாட்டத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.
புது வருட கொண்டாட்டத்தில் கூட்டம் கூடாமல் தவிர்க்கும் முயற்சியாக, கிறிஸ்தவ ஆலயங்களில் இரவுநேர வழிபாட்டுக்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளனர்.