உலகளவில் அந்த நாடு கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்திலும், கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும் இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அங்கு கொரோனா வைரசின் புதிய அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும், வைரஸ் பரவல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இதனால் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 380 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த மதிப்பு 1 கோடியே 50 லட்சத்து 3 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கொரோனோ உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,550 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது.