டோக்கியோ,
ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 88 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் இந்தியர் என்று ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.