ரியோ டி ஜெனிரோ,
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,46,136 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.93 கோடியை தாண்டி உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,38,757 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,5535 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,51,469 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 1,34,45,006 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,38,564 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 12,54,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.