உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பாதிப்பு; 40.86 கோடியாக உயர்வு

உலக அளவில் 40.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்பவில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.

இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 86 லட்சத்து 46 ஆயிரத்து 114 ஆக அதிகரித்து உள்ளது. இது நேற்று 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 88 ஆயிரத்து 687 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 85 லட்சத்து 31 ஆயிரத்து 780 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 19 ஆயிரத்து 334 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...