உலக செய்திகள்

கொரோனா அச்சம்: கைகுலுக்க வேண்டாம்; ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் - இஸ்ரேல் பிரதமர் அறிவுரை

கொரோனா அச்சம் காரணமாக, கைகுலுக்க வேண்டாம், ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசும்போது, கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் வழியில் நமஸ்தே என்று சொன்னால் போதும் என்றார்.

அவர் இவ்வாறு கூறியதோடு நிற்காமல் நமஸ்தே சொல்வது எப்படி என்று அதிகாரிகளுக்கு கைகளை கூப்பி செய்துகாண்பித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு