உலக செய்திகள்

புதிதாக 1,810 பேருக்கு கொரோனா: அமீரகத்தில் ஒரே நாளில் 1,777 பேர் குணமடைந்தனர்

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 981 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,810 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 73 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,777 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,677 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 611 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருவதால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்