உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு தற்போது 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 573 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 38,278 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 18,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 23,507 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 20,654 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 8,080 பேரும், பலூசிஸ்தானில் 3,468 பேரும், இஸ்லாமாபாத்தில் 1,728 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 211 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு