இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியது. கொரோனாவுக்கு மேலும் 26 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 335-ஆக அதிகரித்தது.
சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயிலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் எம்.எல்.ஏ.வான இந்து மதத்தை சேர்ந்த ராணா ஹமீர்சிங்குக்கும் நோய் தாக்கி உள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள தார்பர்கர் மாவட்டத்தில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.