உலக செய்திகள்

பொலிவியா நாட்டு அதிபருக்கு கொரோனா பாதிப்பு

பொலிவியா நாட்டு அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சுக்ரே,

பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக பதவியில் இருந்து வருபவர் ஜீனைன் ஆனெஜ் (வயது 53). அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்தி கொண்டு பணியாற்றுவேன் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வேன் என்றும், இதன்பின்பு மற்றொரு பரிசோதனை செய்து கொள்வேன் என்றும் அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சோனரோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தென் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அறியப்பட்ட 2வது அதிபராக ஆனெஜ் உள்ளார். இதேபோன்று லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசின் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு