கோப்புப்படம் 
உலக செய்திகள்

சீன தலைநகர் பீஜிங்கில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!! - நேரடி வகுப்புகள் ரத்து

சீன தலைநகர் பீஜிங்கில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங் நிர்வாகம் உஷார் அடைந்துள்ளது. அங்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களில் 4 பேருக்கும் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் பிரதான பகுதியில் 24 ஆயிரத்து 326 பேருக்கு சமூகத் தொற்று பதிவாகி உள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் இல்லை.

சீன நாட்டின் பொருளாதார தலைநகர் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரில், நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்