பிரேசிலியா,
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் நாடு 2வது இடத்தில் உள்ளது. அந்நாடு, கொரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுபற்றி பிரேசில் சுகாதார துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 903 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,76,645 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று புதிதாக 30,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவாகளின் மொத்த எண்ணிக்கை 2,06,45,537 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,95,77,135 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.