உலக செய்திகள்

ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு

ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.

பீஜிங்,

சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது.

2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

நேற்று ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. 7,788 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தாக்குதல் உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.

இங்கு கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் தனித்தனி தனிமை மையங்களில் வைப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT