லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக அங்கு அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் 78,610 பேருக்கும், நேற்று 88,376 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக 93,045 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அதே சமயம் இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் இங்கிலாந்தில் 3,201 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,909 ஆக உயர்ந்துள்ளது.