உலக செய்திகள்

மெக்சிகோவில் 10 வாரங்களில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு

மெக்சிகோ நாட்டில் கடந்த 10 வாரங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரும் அந்நாட்டில் மொத்தம் 59,65,958 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

கடந்த 27ந்தேதி வரையில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 596 பேர் தொற்று பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 10 வாரங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது என அந்நாட்டுக்கான நோய் தடுப்பு மற்றும் சுகாதார வளர்ச்சி துறை உயரதிகாரி ஹியூகோ லோபஸ்-கடெல் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, அதிர்ஷ்டவசத்தில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வானது மிக குறைவாக உள்ளது என கூறியுள்ளார். எனினும், சமீப வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். இது 5 பேர் என்ற சராசரி அளவில் இருந்து சற்று உயர்ந்து உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...