உலக செய்திகள்

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் 32 வயதான பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. நான் தொடர்ந்து இணையம் வழியாக எனது அரசியல் பணிகளை தொடருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிலாவல் பூட்டோவின் அரசியல் செயலாளர் ஜமிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை