உலக செய்திகள்

கொரோனா தொற்று; ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்டாக்ஹோம்,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. எனினும், ஐரோப்பிய நாடுகள் மொத்த உலக பாதிப்பு எண்ணிக்கையில் 26 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 26 சதவீதம் அளவுக்கு இந்த பகுதியில் பலியாகி உள்ளனர் என்ற எச்சரிக்கை அறிவிப்பு உலக சுகாதார அமைப்பு சார்பில் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கிளூஜ் கூறும்பொழுது, ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றின் மையம் ஆகியுள்ளன. கடந்த வாரம் ஐரோப்பிய மண்டலத்தில் 29 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வொரு 17 வினாடிக்கு ஒரு முறை ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார்.

கடந்த வாரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது என வருத்தமுடன் குறிப்பிட்டு உள்ளார். எனினும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைகளால் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிகுறிகள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்