உலக செய்திகள்

ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கூடுதலாக பதிவாகி வருகிறது. இதன்படி, நேற்று 34,325 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை இன்று குறைந்து 33,740 பேராக உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 80 லட்சத்து 60 ஆயிரத்து 752 ஆக உயர்வடைந்து உள்ளது. இவர்களில் 2,492 பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இது 7.4% ஆகும். இதேபோன்று பாதிப்பு அதிகரிப்பு விகிதம் 0.42% ஆக குறைந்து உள்ளது.

இவற்றில் மாஸ்கோ நகரில் அதிக அளவாக 5,700 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இது நேற்று 6,823 ஆக இருந்தது.

கொரோனாவுக்கு 1,015 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 998 ஆக இருந்தது. இதனால் மொத்த உயிரிழப்பு 2,25,325 ஆக உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...