உலக செய்திகள்

தேர்தல் ஒத்திபோடப்பட்ட நிலையில் நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

தேர்தல் ஒத்திபோடப்பட்ட நிலையில் நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல் தொடங்கி உள்ளது.

அங்கு 102 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது அலையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலை அக்டோபர் மாதம் 17-ந் தேதிக்கு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிரடியாக ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் அங்கு நேற்று மேலும் 13 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,293 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 22 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு