அபுதாபி,
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,240 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,433 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 16,469 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.