உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,159 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,405 ஆக உயர்ந்துள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,405 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் 1,939 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,03,478 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 19,539 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...