ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,876 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 156 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.