உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சவுதி அரேபியாவில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ரியாத்,

இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி கிடைத்தது. இதையடுத்து, அங்கு நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி தவ்பிக் அல் ரபியா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு