உலக செய்திகள்

‘கொரோனா வைரஸ்’ பீதி எதிரொலி: சீனாவில், இந்திய குடியரசு தின விழா ரத்து - இந்திய தூதரகம் நடவடிக்கை

‘கொரோனா வைரஸ்’ பீதி எதிரொலியாக, சீனாவில், இந்திய குடியரசு தின விழா ரத்து செய்து இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய குடியரசு தின விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதை இந்திய தூதரகம் திடீரென ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உருவான சூழ்நிலையாலும், பொது நிகழ்ச்சிகளை சீனா ரத்து செய்து வருவதாலும் 26-ந் தேதி நடைபெற இருந்த இந்திய குடியரசு தின விழாவை இந்திய தூதரகம் ரத்து செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசு தின விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இந்திய தூதரகம் நடத்திய விருந்தில், சீன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை