உலக செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெறும் பிரான்ஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கில் இருந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசால் பிரான்ஸ் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரசால் பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் நிலவும் சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஈராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படைகளை திரும்ப பெறும் பணிகள் உடனடியாக தொடங்குகிறது என கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை