அமெரிக்கா, நார்வே குழு
உலகை இன்றளவிலும் வதைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்கா, நார்வேயை சேர்ந்த குழுவினர் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்திருப்பதாவது:-
* குழந்தைகளைப் பொறுத்தமட்டில் கொரோனா தீவிரம் குறைவாகவே உள்ளது. இந்த நோய், உலகளவில் உள்நாட்டு தொற்றுநோய் போல மாறுகிறபோது இந்த நோயின் ஒட்டுமொத்த சுமை குறையும்.
* கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மூலமாகவோ, வெளிப்பாடு மூலமாகவோ பெரியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். எனவே இந்தத் தொற்று இனி இளம்குழந்தைகளுக்கு மாறக்கூடும்.
பொதுவான ஜலதோஷ வைரஸ்...
* வைரஸ் வெளிப்பாட்டால் ஏற்படுகிற நோய் எதிர்ப்புச்சக்தியை விட தடுப்பூசியால் வலுவான பாதுகாப்பு ஏற்படுகிறது. அனைவரையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கிறோம்.
* சீனா, ஜப்பான், தென்கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 11 நாடுகளில் நோய் தொற்று சுமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
* அடுத்த சில ஆண்டுகளில் மற்ற பொதுவான ஜலதோஷ வைரஸ் போல கொரோனா வைரஸ் மாறிவிடும். இது இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது வைரசால் பாதிக்கப்படாத சிறுகுழந்தைகளை அதிகமாக பாதிக்கும்.
* நீடித்த நோய் எதிர்ப்புச்சக்தி அல்லது குறைந்தது 10 வருடங்கள் நீடிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியால் வயதானவர்கள் புதிய நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். இளைஞர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படலாம்.
* நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்காவிட்டால், அல்லது வயதானவர்களிடையே கடுமையான நோய்த்தொற்றை தடுக்கா விட்டால் காலப்போக்கில் இறப்புச்சுமை மாறாமல் இருக்கலாம்.
இந்த தகவல்கள், சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.