உலக செய்திகள்

கொரோனா தாக்குதல் எதிரொலி: பிரான்ஸ் நாட்டில் சுகாதார அவசரநிலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸ் நாட்டில் சுகாதார அவசரநிலையை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,40,381 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுகளில் மொத்தம் 34,24,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,93,766 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.

பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 1,67,346 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 24,594 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து இதுவரை 50,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட சுகாதார அவசரநிலையை, ஜூலை 24ம் தேதி வரை ( இரண்டு மாதங்கள்) நீட்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை