கோப்பு படம் 
உலக செய்திகள்

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது - ஜனாதிபதி ஹசன் ரூஹானி வேதனை

ஈரான் முழுவதும் கொரோனா பரவி விட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான்

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், கொரோனா பரவுவதற்கு மத்தியிலும் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முடிந்த அளவு விரைவில் கொரோனாவில் இருந்து ஈரான் மீண்டு வரும் என்று ரூஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு