உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் இந்திய விஞ்ஞானி

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி விஞ்ஞானி வழி நடத்தி வருகிறார். இந்த குழு முதல் ஆய்வில் வெற்றி பெற்று உள்ளது.

சிட்னி

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,840 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,863 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான குழு, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது. ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்ஓ புதிய கொரானா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதற்கு அதை தனியே பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான நிலைகள் ஆகும். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது முக்கியம் என்ற நிலையில், பேராசிரியர் எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.

பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் உயர்கல்வி பயின்ற எஸ்.எஸ்.வாசன், டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்