உலக செய்திகள்

கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில், ரெம்டெசிவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன.

இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது.

மலேரியாவுக்கு பயன்படும் அர்டிசுனேட், புற்றுநோய் மருந்தான இமடினிப், நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படும் இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை இவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு