கோப்புப்படம் 
உலக செய்திகள்

துருக்கியில் புதிதாக 26,398 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 213 பேர் பலி

துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அங்காரா,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,398 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 68,47,259 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 213 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 27,160 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 63 லட்சத்து 37 ஆயிரத்து 070 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,48,615 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்