டாக்கா,
வங்காள தேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,00,618 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது.
வங்காள தேசத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,102 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 985 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 48,438 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.