கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44.98 கோடியாக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50.00,10,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,98,48,549 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,39,55,716 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,05,928 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,21,03,067, உயிரிழப்பு - 10,12,461, குணமடைந்தோர் - 7,99,59,456

இந்தியா - பாதிப்பு - 4,30,36,573, உயிரிழப்பு - 5,21,723, குணமடைந்தோர் - 4,25,03,383

பிரேசில் - பாதிப்பு - 3,01,61,205, உயிரிழப்பு - 6,61,389, குணமடைந்தோர் - 2,90,76,974

பிரான்ஸ் - பாதிப்பு - 2,69,72,867, உயிரிழப்பு - 1,43,466, குணமடைந்தோர் - 2,41,98,650

ஜெர்மனி - பாதிப்பு - 2,27,71,886, உயிரிழப்பு - 1,32,311, குணமடைந்தோர் - 1,88,93,100

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,16,41,004

ரஷியா - 1,80,07,915

தென்கொரியா - 1,56,35,274

இத்தாலி - 1,53,20,753

துருக்கி - 1,49,65,867

ஸ்பெயின் - 1,16,27,487

வியட்நாம் - 1,02,50,160

அர்ஜெண்டீனா - 90,54,126

நெதர்லாந்து - 79,95,537

ஈரான் - 71,94,768

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்