கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிரேசிலில் புதிதாக 48,504 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,172 பேர் பலி

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்து 69 ஆயிரத்து 003 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,32,949 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,75,30,369 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 10,05,685 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை