கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகமெங்கும் 60 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகமெங்கும் கொரோனா பலி 60 லட்சத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் வெளிப்பட்ட கொரோனாவின் ஆதிக்கம், இன்னும் உலக நாடுகளில் ஓயவில்லை. இந்த தொற்றினால் உலகமெங்கும் பலியானோர் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 44 கோடியே 62 லட்சத்து 04 ஆயிரத்து 203 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 லட்சத்து 18 ஆயிரத்து 146 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஐரோப்பாவில் 18 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்க நாடுகளில் 14 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கொரோனாவின் அதிகபட்ச தாக்குதலுக்கு ஆளான நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளன. கடந்த மாதம் 27-ந் தேதி வரை உலகளவில் 1,060 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்