உலக செய்திகள்

இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவிப்பு

இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஒட்டவா,

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது. ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கனடா போக்குவரத்து துறை மந்திரி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு