உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மாலத்தீவுகள் தடை

இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு மாலத்தீவுகள் தடை விதித்துள்ளது.

மாலே,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவுகள் அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாலத்தீவுகள் அரசு தெற்காசிய நாடுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

எனினும் சுகாதார நிபுணர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மே 13-ஆம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகள் நாட்டில் இதுவரை 38 ஆயிரத்து 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 36 சதவீதம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை