உலக செய்திகள்

நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே கடைசி வரை நீட்டித்து அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே மே 14-ஆம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய முன்பதிவுகளைத் தொடங்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ மற்றும் சரக்கு விமானங்கள் இயக்கத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்